எகிப்திலிருந்து திரும்பி வருதல்
19 ஏரோது காலமானதும்,
ஆண்டவருடைய தூதர் எகிப்தில் யோசேப்புக்குக் கனவில் தோன்றி,
20 "நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு
இஸ்ரயேல் நாட்டுக்குச் செல்லும்.
ஏனெனில் குழந்தையின் உயிரைப் பறிக்கத் தேடியவர்கள்
இறந்து போனார்கள்" என்றார்.
21 எனவே, யோசேப்பு எழுந்து
குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு
இஸ்ரயேல் நாட்டுக்கு வந்து சேர்ந்தார்.
22 ஆனால் யூதேயாவில் அர்க்கெலா
தன் தந்தைக்குப்பின் அரசாளுவதாகக் கேள்விப்பட்டு
அங்கே போக அவர் அஞ்சினார்;
கனவில் எச்சரிக்கப்பட்டுக் கலிலேயப் பகுதிகளுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
23 அங்கு அவர் நாசரேத்து எனப்படும் ஊருக்குச் சென்று அங்குக் குடியிருந்தார்.
இவ்வாறு, "நசரேயன்" என அழைக்கப்படுவார் என்று
இறைவாக்கினர்கள் உரைத்தது நிறைவேறியது. [4]- குறிப்புகள்
[1] 2:6 - மீக் 5:2.
[2] 2:15 - ஓசே 11:1.
[3] 2:18 - எரே 31:15.
[4] 2:23 - மாற் 1:24; லூக் 2:39; யோவா 1:45.